/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டில் இருந்த 60 சவரன் நகை மாயம்
/
வீட்டில் இருந்த 60 சவரன் நகை மாயம்
ADDED : ஜன 09, 2025 08:01 PM
குன்றத்துார்:தாம்பரம் அடுத்த படப்பை அருகே, கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 24. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது தந்தை மோகன் தனியார் செக்யூரிட்டியாகவும், தாய் ஆதிலட்சுமி கரசங்கால் ஊராட்சி மக்கள் நலப் பணியாளராகவும் பணியாற்றி வந்தனர்.
செல்வகுமாரின் மனைவி தமிழரசிக்கு, கடந்த 21ல் பெண் குழந்தை பிறந்ததையடுத்து, தமிழரசி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாய் வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த பீரோ திறந்திருந்த நிலையில், அதில் இருந்த 60 சவரன் நகை காணாமல் போனதை கண்டு, செல்வகுமார் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில், செல்வகுமார் புகார் அளித்தார். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

