/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவ முகாமில் 640 பேர் பயன்
/
மருத்துவ முகாமில் 640 பேர் பயன்
ADDED : அக் 07, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், -உத்திரமேரூரில், இலவச மருத்துவ முகாமில், 640 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.
உத்திரமேரூரில், நுாக்கலம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
கோவில் நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க செயலர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். அதில், கண், காது, தொண்டை, பல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில், 640 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.