/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு
/
குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு
குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு
குறைதீர் கூட்டம்: ஊராட்சி கூட்டமைப்பு குழுவினர் மனு
ADDED : அக் 07, 2025 01:57 AM
காஞ்சிபுரம், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழுவினர், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழுவினர் மனுவில் கூறியதாவது:
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக நடக்கவில்லை. இதனால், பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.
ஆகையால், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, தனியாக குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.