/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடற்கரை - தாம்பரம் தடத்தில் 65 மின்சார ரயில் இன்று ரத்து
/
கடற்கரை - தாம்பரம் தடத்தில் 65 மின்சார ரயில் இன்று ரத்து
கடற்கரை - தாம்பரம் தடத்தில் 65 மின்சார ரயில் இன்று ரத்து
கடற்கரை - தாம்பரம் தடத்தில் 65 மின்சார ரயில் இன்று ரத்து
ADDED : செப் 22, 2024 05:24 AM
சென்னை, : சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், 65 மின்சார ரயில்களின் சேவை, இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பயணியர் வசதிக்காக, பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள், இன்று காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் வழக்கமாக செல்ல வேண்டிய 65 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் 20 மின்சார ரயில்கள், வழக்கம் போல் ஓடும். மேலும், கடற்கரை - பல்லாவரம் இடையே 44 பயணியர் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - பல்லாவரத்திற்கு காலை 6:15, 6:55, 7:20, 7:45, 8:00, 8:35, 9:38, 10:10, 10:40, 11:20, நண்பகல் 12:00, மதியம் 1:05, 1:30, 2:30, மாலை 3:10, 3:45, 4:10, 4:30, 4:50, 5:10, 5:50, 6:20, 6:50, இரவு 7:00 மணிக்கு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 7:10, 7:45, 8:10, 8:35, 8:55, 9:35, 10:35, 11:05, 11:35, நண்பகல் 12:10, 12:55, மதியம் 1:55, 2:25, மாலை 3:20, 4:00, 4:40, 5:05, 5:20, 5:40, மாலை 6:05, 6:40, இரவு 7:15, 7:40, 7:50 மணிக்கு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.