/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
5 பிரிவுகளில் 67 விளையாட்டு போட்டிகள்
/
5 பிரிவுகளில் 67 விளையாட்டு போட்டிகள்
ADDED : ஆக 27, 2025 02:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து பிரிவுகளில், முதல்வர் விளையாட்டு போட்டிகளை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ - -மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அளவில் ஐந்து பிரிவுகளில் 53 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் என மொத்தம் 67 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் நேற்று துவங்கியது. செப்டம்பர் மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க 50,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இப்போட்டிகளை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.