/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
80 வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து சேதம்
/
80 வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து சேதம்
ADDED : அக் 05, 2025 01:09 AM

உத்திரமேரூர்:வெங்கச்சேரியில் 80 வைக்கோல் கட்டுகள் நேற்று தீப்பற்றி எரிந்து சேதமானது.
உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட, வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம், 45. இவர், ஐந்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த மாடுகளுக்கு தீனி அளிக்க இயந்திரத்தின் மூலம் சுருட்டப்பட்ட, 100 வைக்கோல் கட்டுகளை விலைக்கு வாங்கி வீட்டருகே போட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில், வைக்கோல் கட்டுகள் நேற்று பிற்பகல் 12 மணயளவில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதை கண்ட விநாயகம் சம்பவம் குறித்து, உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், 80 வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமானது.