/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அனந்தபுஷ்கரணி குளக்கரைக்கு சிமென்ட் கல் சாலை
/
அனந்தபுஷ்கரணி குளக்கரைக்கு சிமென்ட் கல் சாலை
ADDED : அக் 05, 2025 01:08 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 22.50 கோடி ரூபாய் மதிப்பில், கிழக்கு ராஜ கோபுரம், மேற்கு ராஜ கோபுரம், 16 கால் மண்டபம், திருமங்கையாழ்வார் சன்னிதி பழமை மாறாமல் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
இதில், ஒரு பகுதியாக கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கல் சாலை அகற்றப்பட்டு, ஆழ்வார் சன்னிதி வரை 88 லட்சம் ரூபாய் மதிப்பில் கருங்கற்கள் வாயிலாக இணைப்பு பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் அகற்றப்பட்ட சிமென்ட் கல் வாயிலாக, அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி தெரிவித்தார்.