/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறுந்த மின் கம்பியில் சிக்கி 9 எருமை மாடுகள் பலி
/
அறுந்த மின் கம்பியில் சிக்கி 9 எருமை மாடுகள் பலி
ADDED : அக் 27, 2024 12:35 AM

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த, அன்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கால்நடை பராமரிப்போர், நேற்று, தங்களது மாடுகளை வழக்கம் போல மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.
அங்குள்ள விவசாய நிலத்தின் ஒரு பகுதியில், கும்பலாக மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதில், சில எருமை மாடுகள் தரையில் விழுந்து துடிப்பதை கண்டு கால்நடை உரிமையாளர்கள் அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது, அப்பகுதி விவசாய நில மின் மோட்டார்களுக்கு செல்லும் மின் கம்பி அறுந்து தரையில் விழுந்திருப்பதை கண்டனர்.
இதில், மின் கம்பியில் சிக்கி அன்னாத்துர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், 44, என்பவருக்கு சொந்தமான 5 எருமைகள், நந்தகுமார், 36, என்பவருடைய 3 எருமைகள், டில்லிபாபு 40, என்பவரது ஒரு எருமை என, ஒன்பது மாடுகள் உயிரிழந்தன.
அப்பகுதியில், பழுதடைந்து மக்கிப்போன பழைய மின் கம்பிகளை மாற்றாத சாலவாக்கம் மின்வாரியத்தின் அலட்சியமே மாடுகள் உயிரிழப்பிற்கு காரணம் என, அப்பகுதி கால்நடை பராமரிப்போர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.