/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கத்திற்கு 913 கன அடி நீர் வரத்து
/
செம்பரம்பாக்கத்திற்கு 913 கன அடி நீர் வரத்து
ADDED : அக் 15, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு, மழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தின் காரணமாக, வினாடிக்கு, 913 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், நேற்றைய நிலவரப்படி, 18.79 கன அடி உயரமாக உள்ளது. கொள்ளளவு 2,314 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 913 கன அடியாகவும் உள்ளது.
ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, 195 கன அடி. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், இந்த ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.