/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை நடுவே ஆழ்துளை கிணறு வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
சாலை நடுவே ஆழ்துளை கிணறு வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
சாலை நடுவே ஆழ்துளை கிணறு வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
சாலை நடுவே ஆழ்துளை கிணறு வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : டிச 14, 2024 11:26 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமிச்சி கிராமத்தில் சாலவாக்கம் - திருமுக்கூடல் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், திருமுக்கூடல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு, சாலையிலேயே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அப்பகுதி வாசிகளுக்கு குழாய் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆழ்துளை கிணற்றால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயலும்போது, எதிரே வரும் வாகனத்தோடு மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், இந்த சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி, ஆழ்துளை கிணற்றின் மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தும் ஆழ்துளை கிணற்றை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.