/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆனம்பாக்கத்தில் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் குடிநீர்
/
ஆனம்பாக்கத்தில் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் குடிநீர்
ஆனம்பாக்கத்தில் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் குடிநீர்
ஆனம்பாக்கத்தில் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் குடிநீர்
ADDED : ஏப் 18, 2025 12:51 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் ஊராட்சியில், நீர்குன்றம், நெற்குன்றம், ஆனம்பாக்கம், வேட்டைக்கார குப்பம், உப்பரபாளையம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறு மின்விசை குழாய்கள், கைக்குழாய்கள், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆனம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேட்டு தெருவில், பூமிக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
அவ்வாறு வெளியேறும் குடிநீர் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கும் குடிநீரில் கிருமிகள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில், குடிநீர் வீணாக வெளியேறி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.