/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்
/
சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்
ADDED : டிச 31, 2025 05:32 AM

ஸ்ரீபெரும்புதுார்: தாம்பரம் அடுத்த, மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் டேனியல், 52. நேற்று முன்தினம் மாலை, 'மகேந்திரா சைலோ' காரில் மனைவி மற்றும் மகனுடன், ஸ்ரீபெரும்புதுார் சென்றார்.
இரவு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து வீட்டிற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையில், பிள்ளைப்பாக்கம் சிப்காட் அருகே வந்த போது, காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வெளியேறியது.
இதையடுத்து காரை சாலையோரம் நிறுத்தி விட்டு மூவரும் காரில் இருந்து வெளியேறினர். கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.
இது குறித்த தகவலின் படி, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

