/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய சிலம்பம் போட்டி: காஞ்சிபுரம் அணி முதலிடம்
/
தேசிய சிலம்பம் போட்டி: காஞ்சிபுரம் அணி முதலிடம்
ADDED : டிச 31, 2025 05:32 AM

காஞ்சிபுரம்: பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர்கள், 21 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என, மொத்தம 40 பதக்கங்களை வென்று முதலிடம் பெற்றனர்.
நேஷனல் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், பெங்களூருவில், நேற்று நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு, இன்டர்நேஷனல் யூனியன் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா பிரசிடெண்ட் மாஸ்டர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார்.
போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 400 மாணவ-மாணவியர் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், மான் கம்பு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள்வீச்சு உள்ளிட்ட 4-17 வயது பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள், மா ஸ்டர் அஸ்வின் புலிகேசி தலைமையில், தமிழக அணி சார்பில், போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 21 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என, 40 பதக்கங்களை வென்று முதலிடம் பெற்று, தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

