/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழவேரியில் முஸ்லிம்களுக்கான மயானம்
/
பழவேரியில் முஸ்லிம்களுக்கான மயானம்
ADDED : நவ 07, 2024 12:46 AM

உத்திரமேரூர், நவ. 7--
உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பழவேரி கிராமம். இக்கிராமத்தில் குடியிருக்கும் முஸ்லிம்கள், தங்கள் குடும்பங்களில் உயிர் நீத்தோர் சடலங்களை அடக்கம் செய்ய 15 கி.மீ., தூரத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதி முஸ்லிம் மயானத்தை நாடுகின்றனர்.
இதனால், பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, தங்கள் கிராமத்திலேயே, தங்களுக்கு மயான வசதி ஏற்படுத்தி தர நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, முஸ்லிம்களுக்கென மயானம் ஏற்படுத்த அப்பகுதி மலையடிவாரத்தில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஊராட்சி கனிம வள நிதியின் கீழ், 8 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் உள்ளிட்ட மயான கட்டுமான பணிகள் தற்போது நடைபெறுகின்றன.