/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா
/
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா
ADDED : அக் 01, 2024 07:42 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மக்கள் ஊக்க வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், கர்ப்பிணிகளுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா நேற்று நடந்தது.
அறக்கட்டளை நிறுவன தலைவர் மோதில் தாஸ் தலைமை வகித்தார். சாலவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ சுகாதார அலுவலர் பிரேமாவதி முன்னிலை வகித்தார்.
இதில், 50 கர்ப்பிணிகளுக்கு இலவச ஊட்டச்சத்து உணவுகள், சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இவ்விழாவில், சாலவாக்கம் வருவாய் ஆய்வாளர் சூர்யகலா, கிராம நிர்வாக அலுவலர் ஜோதி, சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தன்னார்வலர் மரம் ரமேஷ் நன்றி கூறினார்.