/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து சேதம்
/
மின்கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து சேதம்
ADDED : ஆக 31, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:-உத்திரமேரூரில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.
உத்திரமேரூர் பேரூராட்சி, கேதாரிஸ்வரர் கோவில் தெருவில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு உள்ளது. இவர் சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டதால், குடிசை வீடு பூட்டப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு குடிசை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அனைத்தனர். தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

