/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அபாயகரமான சாலையில் தடுப்பு அமையுமா?
/
அபாயகரமான சாலையில் தடுப்பு அமையுமா?
ADDED : டிச 10, 2024 06:22 AM

வாலாஜாபாத் : வாலாஜாபாத்- - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் பிரதான சாலையில் இருந்து உள்ளாவூர், லிங்காபுரம், தோண்டாங்குளம், தொள்ளாழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு அப்பகுதியினர் சென்று வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், இச்சாலை வழியாக நள்ளிரவு வரை பயணிக்கின்றனர். இந்த சாலையில், மணப்பாக்கம் ஏரி கலங்கல் அருகே அபாயகரமான வளைவு உள்ளது.
இச்சாலையின் ஒருபுறம் ஏரிக்கரையையொட்டி உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.
மேலும், மின் வசதி இல்லாத இச்சாலையில், இரவு நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
எனவே, விபத்தை தடுக்கும் பொருட்டு, இச்சாலை வளைவுகளில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.