/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஷ்மீர் சிறப்பை விவரிக்கும் 'டூம்' நுால் குறித்து கலந்தாய்வு
/
காஷ்மீர் சிறப்பை விவரிக்கும் 'டூம்' நுால் குறித்து கலந்தாய்வு
காஷ்மீர் சிறப்பை விவரிக்கும் 'டூம்' நுால் குறித்து கலந்தாய்வு
காஷ்மீர் சிறப்பை விவரிக்கும் 'டூம்' நுால் குறித்து கலந்தாய்வு
ADDED : பிப் 15, 2024 10:37 PM
சென்னை:காஷ்மீரின் பெருமைகளை விளக்கும், 98வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நாளை இரவு, காஷ்மீர் சிறப்பை விவரிக்கும், ரோஹினி வைஷ்ணவியின்,'டூன்' நுால் குறித்து கலந்தாய்வு நடக்கிறது.
காஞ்சி மடத்தின் சார்பில், 14 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு - டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
அதன்படி, நாளை இரவு 7:00 மணிக்கு, 98வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், காஷ்மீர் சிறப்பை விவரிக்கும், பிரபல எழுத்தாளர் ரோஹினி வைஷ்ணவியின், 'டூன்' நுால் குறித்து கும்பகோணம், அரவிந்த் விஷன் கேர் தலைமை மருத்துவ அதிகாரி ஞானம், காஷ்மீர் சொற்பொழிவு நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ஆகியோர் நுாலாய்வு செய்து, கலந்துரையாடுகின்றனர்.
இந்நிகழ்ச்சியை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC-cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி', காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி 'யு - டியூப்' காஞ்சி மடத்தின் சமூக வலைதளம் ஆகியவற்றின் வாயிலாகவும் பார்க்க முடியும்.