/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாரிமேற்கத்தியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை
/
மாரிமேற்கத்தியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை
மாரிமேற்கத்தியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை
மாரிமேற்கத்தியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை
ADDED : மே 11, 2025 11:39 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள மாரிமேற்கத்தியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது. முன்னதாக, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, விரதமிருந்த பக்தர்கள் உத்திரமேரூர் முத்து பிள்ளையார் கோவிலில் இருந்து, 1,008 பால் குடங்களுடன் ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலமானது, பஜார் தெரு, சன்னிதி தெரு, கச்சேரி தெரு வழியாக, மாரிமேற்கத்தியம்மன் கோவிலை சென்று அடைந்தது.
இதையடுத்து, பக்தர்கள் வரிசையில் நின்றவாறு பால் குடங்களை அம்மன் மீது ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில், உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.