/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட காஞ்சி கலெக்டர் வேண்டுகோள்
/
ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட காஞ்சி கலெக்டர் வேண்டுகோள்
ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட காஞ்சி கலெக்டர் வேண்டுகோள்
ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட காஞ்சி கலெக்டர் வேண்டுகோள்
ADDED : அக் 24, 2024 08:35 PM
காஞ்சிபுரம்:தீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாத, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகையின்போது, காலை 6:00 மணி முதல், 7:00 மணி வரையும், மாலை 7:00 மணி முதல், இரவு 8:00 மணி வரையும் என, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், சரவெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டு உள்ளார்.