/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரு மாதமாக வழியும் கழிவுநீர் குடிநீரில் கலக்கும் பேராபத்து
/
ஒரு மாதமாக வழியும் கழிவுநீர் குடிநீரில் கலக்கும் பேராபத்து
ஒரு மாதமாக வழியும் கழிவுநீர் குடிநீரில் கலக்கும் பேராபத்து
ஒரு மாதமாக வழியும் கழிவுநீர் குடிநீரில் கலக்கும் பேராபத்து
ADDED : ஜன 21, 2025 01:03 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தென்கரை தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.
இத்தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் சந்தவெளி அம்மன் கோவில் அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு 'மேன்ஹோல்' வழியாக ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
இதனால், அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள, ஆழ்துளை குழாய் வழியாக செல்வதால், கழிவுநீர் குடிநீரில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.