/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் சூழல்
/
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் சூழல்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் சூழல்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் சூழல்
ADDED : அக் 18, 2024 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வெள்ளைகுளம் கங்கையம்மன் தெருவில் இருந்து, புத்தேரிக்கு செல்லும் சாலை இணையும் இடத்தில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.
வாகன போக்குவரத்து நிறைந்த சாலையோரம் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போதும் நிலை தடுமாறி, தடுப்பு இல்லாத சிறுபாலத்தை ஒட்டியுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.