/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வண்டலுாருக்கு புதிய வருகை கான்பூர் கழுகு, அனுமன் குரங்கு
/
வண்டலுாருக்கு புதிய வருகை கான்பூர் கழுகு, அனுமன் குரங்கு
வண்டலுாருக்கு புதிய வருகை கான்பூர் கழுகு, அனுமன் குரங்கு
வண்டலுாருக்கு புதிய வருகை கான்பூர் கழுகு, அனுமன் குரங்கு
ADDED : ஜன 30, 2024 04:23 AM

தாம்பரம், : விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், கான்பூர் பூங்காவில் இருந்து அனுமன் குரங்கு, ஹிமாலயன் கிரிக்போன் கழுகு உள்ளிட்ட உயிரினங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்கு மாற்றாக, இங்கிருந்து மலைப்பாம்பு உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.
வண்டலுார் உயிரியல் பூங்கா, கட்ட உடல் மலைப்பாம்பு, சருகுமான், நெருப்புக் கோழிகளை இனப்பெருக்கம் செய்வதில், சிறந்த பூங்காவாக திகழ்கிறது.
மற்றொரு புறம், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், மற்றொரு பூங்காக்களில் இருந்து விலங்குகளை கொண்டு வருவதிலும், நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது.
இந்நிலையில், உ.பி., மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள், ஐந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிக்போன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகு என, நான்கு வகைகள், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன. இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிக்கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு மாறியவுடன், அவை பார்வைக்கு விடப்படும்.
இதற்கு மாற்றாக, வண்டலுாரில் இருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, இரண்டு ஜோடி சருகு மான், மூன்று நெருப்புக்கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை, கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு, நேற்று அனுப்பப்பட்டன.