/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமையும் சூழல் தற்போது... இல்லை! தனியார் நிலத்தை ரூ.26 கோடியில் வாங்க அரசு தயக்கம்
/
காஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமையும் சூழல் தற்போது... இல்லை! தனியார் நிலத்தை ரூ.26 கோடியில் வாங்க அரசு தயக்கம்
காஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமையும் சூழல் தற்போது... இல்லை! தனியார் நிலத்தை ரூ.26 கோடியில் வாங்க அரசு தயக்கம்
காஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமையும் சூழல் தற்போது... இல்லை! தனியார் நிலத்தை ரூ.26 கோடியில் வாங்க அரசு தயக்கம்
ADDED : டிச 03, 2024 04:43 AM

காஞ்சிபுரம்: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முதன்மையான மாவட்டங்களில், காஞ்சிபுரம் முக்கிய இடத்தில் உள்ளது.
லட்சக்கணக்கான
மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களின்
அடிப்படையான பிரச்னைகள் இன்னும் தீராமலேயே உள்ளன.
அதில்,
காஞ்சிபுரம் புறநகர் பேருந்து நிலையம் தற்போது வரை அமைக்க முடியாத நிலை
நீடிக்கிறது. காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன், 7
ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், தற்போது பயன்பாட்டில் உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இங்கு,
சராசரியாக ஒரு நாளைக்கு, 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. அனைத்து
பேருந்துகளும், நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி
ஏற்பட்டு, ரெட்டை மண்டலம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்து வசதியின்றி உள்ளது.
இதனால், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது.
முந்தைய
அ.தி.மு.க., ஆட்சியில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என,
அப்போதைய முதல்வர் பழனிசாமி, 2017ல் அறிவிப்பு வெளியிட்டார்.
அதைத்
தொடர்ந்து, கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பேருந்து
நிலையத்துக்கு இடம் தேர்வு செய்த பின்பும், நிலத்தை கையகப்படுத்துவதில்
ஏற்பட்ட குளறுபடியால், தற்போது வரை பேருந்து நிலையத்திற்கான இடம்
முடிவாகாமல் உள்ளது.
தி.மு.க., அரசு அமைந்தவுடன், காஞ்சிபுரம்
பேருந்து நிலையம் அமைக்க, 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால், நிலமே
இன்னும் முடிவாகாமல் உள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்,
பொன்னேரிக்கரையில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தி,
அதில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பேருந்து
நிலையம் அமையவுள்ள இடத்தில், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன்,
பொன்னேரிக்கரையில் ஆய்வு செய்தார். இதனால், பேருந்து நிலையம்
அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனியார்
அறக்கட்டளை பேருந்து நிலையத்திற்கு இடம் தர விருப்பமில்லாததால், நிலத்தை
கையகப்படுத்த கூடாது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளனர்.
மேலும், நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடையும் பெற்றுஉள்ளனர்.
தனியார்
அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்வதற்கு முன்,
பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலை அருகே, தனியாருக்கு சொந்தமான
இடத்தில், 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தை நில
எடுப்பு சட்டத்தின் கீழ், இழப்பீடு வழங்கி எடுத்துக் கொள்ள மாவட்ட
நிர்வாகம் முடிவு செய்தது. இந்த நிலத்தை நில எடுப்பு செய்ய, நகராட்சி
நிர்வாகத் துறையிடம், மாவட்ட உயரதிகாரிகள் கேட்டனர்.
ஆனால், நில
எடுப்பு செய்தால், இழப்பீடாகவே 26 கோடி ரூபாயை, நில உரிமையாளர்களுக்கு
வழங்க வேண்டும் என்பதால், அந்த முடிவு கைவிடப்பட்டதாக அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
ஆர்வம்
தனியார் நிலத்தை கையகப்படுத்துவதை காட்டிலும், அரசு நிலத்தை தேர்வு செய்ய நகராட்சி நிர்வாகத்துறை ஆர்வம் காட்டுகிறது.
ஆனால்,
வெள்ளைகேட் முதல் காரை வரை, இடைப்பட்ட துாரத்தில், பேருந்து நிலையம்
அமைப்பதற்கு ஏற்ற அரசு இடம் இல்லை என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தனியாரிடம்
26 கோடி ரூபாய் கொடுத்து நிலத்தை கையகப்படுத்துவதை காட்டிலும், தனியார்
அறக்கட்டளை நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை சந்தித்து, அறக்கட்டளையின்
நிலத்தை கையகப்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் முயற்சித்து வருகிறது.
இதனால், புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான சூழல் தற்போது இல்லை என்பது தெளிவாகி உள்ளது.
காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, 26 கோடி ரூபாய் கொடுத்து அரசு வாங்க தயக்கம் காட்டுவதால், அறக்கட்டளை இடத்தை நீதிமன்ற வழக்கை சந்தித்து பெற, மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது.
இதனால், புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான சூழல் தற்போது இல்லை என்பது தெரியவந்துள்ளது.
வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:
தனியார் அறக்கட்டளை தொடுத்துள்ள வழக்கை சந்தித்து வருகிறோம். அவர்கள் நில எடுப்பு செய்ய கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீக்க முயற்சித்து வருகிறோம்.
வழக்கை சந்தித்து, பேருந்து நிலையம் அமைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியாரிடம் உள்ள 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், 26 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. அரசு நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பது முதல் தேர்வாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

