/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்
/
சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்
சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்
சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்
ADDED : ஏப் 01, 2025 11:41 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது, அப்பகுதியில், 2,000 ஏக்கர் பரப்பளவில் நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அவ்வாறு அறுவடை செய்யும் நெல்லை, நெற்களத்தில் கொட்டி உலர்த்தாமல் அப்பகுதியில் உள்ள வந்தவாசி -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையோரத்தில், கொட்டி உலர்த்தி வருகின்றனர்.
பின், அங்கேயே நெல்லை வாகனங்களில் ஏற்றி காஞ்சிபுரம், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால், நெடுஞ்சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால், அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் சாலையோரத்தில் உள்ள நெல் குவியல் மீது, எதிர்பாராதவிதமாக வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். அப்பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நெல் கொட்டப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே, நெடுஞ்சாலையோரத்தில் நெல் கொட்டுவோர் மீது, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

