/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி நுழைவாயிலில் பிளக்ஸ் பேனர் ராமானுஜபுரத்தில் ‛அட்ராசிட்டி'
/
பள்ளி நுழைவாயிலில் பிளக்ஸ் பேனர் ராமானுஜபுரத்தில் ‛அட்ராசிட்டி'
பள்ளி நுழைவாயிலில் பிளக்ஸ் பேனர் ராமானுஜபுரத்தில் ‛அட்ராசிட்டி'
பள்ளி நுழைவாயிலில் பிளக்ஸ் பேனர் ராமானுஜபுரத்தில் ‛அட்ராசிட்டி'
ADDED : செப் 02, 2025 01:24 AM

ஸ்ரீபெரும்புதுார்,
ஸ்ரீபெரும்புதுார் அருகே, ராமானுஜபுரம் அரசு பள்ளி நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரால், மாணவ - மாணவியர் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், ராமானுஜபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி, அப்பகுதி இளைஞர்கள், நடிகை நயன்தாராவின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட பிளக்ஸ் பேனரை, அரசு பள்ளி நுழைவாயிலில் கட்டியுள்ளனர். மறுபுறம் அலங்கார மின் விளக்கி கட்டியுள்ளனர்.
இதனால், பள்ளி மாணவ - மாணவியர் மின் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, பள்ளி அருகே உள்ள பழைய இரும்பு பொருட்கள் கடைக்கு சொந்தமான, பிளாஸ்டிக் பொருட்களை மூட்டைகளில் கட்டி, பள்ளி எதிரே குவித்து வைத்துள்ளனர். குப்பையில் இருந்து துார்நாற்றம் வீசுவதாலும், அதிலிருந்து விஷ ஜந்துகள் பள்ளியில் நுழைவதாலும் மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, பள்ளி நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர், அலங்கார மின் விளக்கு மற்றும் பழைய இரும்பு பொருட்கள் கடையின் குப்பைகளை அகற்ற வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.