/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிக்கரை சாலை குறுக்கே இடையூறாக மின் கம்பம்
/
ஏரிக்கரை சாலை குறுக்கே இடையூறாக மின் கம்பம்
ADDED : செப் 28, 2024 10:57 PM

ஊவேரி:காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி ஊராட்சியில், மணியாட்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, சாமந்திபுரம் கிராமம் மற்றும் மணியாட்சி ஏரிக்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குறுக்கே, மின கம்பம் இடையூறாக உள்ளது.
சாமந்திபுரம் கிராமத்தில் இருந்து, டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில், மணியாட்சி கிராமம் வழியாக வயல்வெளிக்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக, ஏரிக்கரையோரம் விவசாய நிலங்களில் இருந்து நெல், காய்கறி உள்ளிட்ட விளைப்பொருட்கள் மற்றும் டிராக்டரில் உர மூட்டைகள் எடுத்து செல்லும் போது, வீடுகளின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாக வேண்டி உள்ளது.
சமீபத்தில், இடையூறான கம்பத்தின் மீது மோதாமல் இருக்க சுற்றுச்சுவர் மீது மோதியதில் சுவர் முழுதும் இடிந்து விழுந்துள்ளது.
எனவே, மணியாட்சி கிராமத்தில் சாலை நடுவே இடையூறாக இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மணியாட்சி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.