/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெற்களமா... மழைநீர் தேங்கும் இடமா?
/
நெற்களமா... மழைநீர் தேங்கும் இடமா?
ADDED : நவ 17, 2024 12:49 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, தொடூர் கிராமத்தில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2022-23ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.
இதில், 10.50 லட்ச ரூபாய் செலவில், 18 மீட்டர் அகலமும், 15 மீட்டர் நெற்களம் கட்டி கொடுக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
கடந்த மே மாதம் நெற்களம் சேதம் ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்தன. சம்மந்தப்பட்ட துறையினர், நேற்று முன் தினம் வரையில் சரி செய்யவில்லை.
இதனால், மழைக்காலத்தில் நெற்களத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சம்பா பருவத்தில் நெல் அறுவடை செய்தால், களத்தில் கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடூர் கிராமத்தில் சேதமடைந்த நெற்களத்தை சீரமைத்து, தண்ணீர் தேங்காதவாறு சரி செய்ய வேண்டும் என, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

