/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
/
பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 07, 2025 07:56 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்திற்குள், நேற்று மதியம் 4 அடி நீளமுடைய சாரை பாம்பு புகுந்தது.
வகுப்பறை ஓரமாக ஊர்ந்து சென்றுள்ளது. இதை பள்ளி ஆசிரியை ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து, பாம்பு பிடிப்போரை வரவழைத்து, பள்ளி வளாகத்திற்குள் இருந்த பாம்பை அடித்து கொன்றனர்.
பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால், மாணவ - மாணவியரிடம் அச்சமடைந்தனர். பள்ளி வளாகம் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அவற்றை ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.