/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக்கில் சென்ற வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
/
பைக்கில் சென்ற வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
பைக்கில் சென்ற வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
பைக்கில் சென்ற வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
ADDED : செப் 26, 2024 07:53 PM
ஸ்ரீபெரும்புதுார்:வேலுார் மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணம், 36; ஸ்ரீபெரும்புதுார் அங்காளம்மன் கோவில் தெருவில் தங்கி, நெமிலியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் குவாலிட்டி மேனேஜராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, ‛யமஹா' பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மண்ணுார் --- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செல்வப்பெருமாள் நகர் அருகே, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்தார்.
இதில், லாரி சக்கரம் அவரது இடது கை மீது ஏறி இறங்கியது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, லாரி ஓட்டுனரை ----------------------பிடித்து விசாரித்து வருகின்றனர்.