/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் மின்மாற்றி
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் மின்மாற்றி
ADDED : செப் 18, 2024 11:47 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பென்னலூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு உத்திரமேரூர் மின் பகிர்வான் வட்டம் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக இப்பகுதியில் தொடர்ந்து குறைந்த மின்அழுத்த பிரச்னை நிலவுகிறது. இதனால், இரவு நேரங்களில் டியூப்லைட் ஒளிராமலும், எல்.இ.டி., 'டிவி'க்கள் இயங்காமலும், மின்விசிறிகள் வேகமற்று சுழலுதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன.
மேலும், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைதல் போன்ற பல சிக்கல் இருந்து வருகின்றன.
இதனால், இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, கடந்த மாதம் அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. எனினும், அதற்கான மின் இணைப்பு இதுவரை வழங்காமல் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகிறது.
எனவே, பென்னலூரில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி வாயிலாக மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.