/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா விமரிசை
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா விமரிசை
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா விமரிசை
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா விமரிசை
ADDED : ஆக 17, 2025 01:38 AM

வல்லக்கோட்டை:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம், கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
ஆடி மாதத்தில் வந்த இரண்டாவது கிருத்திகை விழாவை முன்னிட்டு, நேற்று காலை, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.