/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்றுகளுக்கு கருசிதைவு தடுப்பூசி
/
கன்றுகளுக்கு கருசிதைவு தடுப்பூசி
ADDED : செப் 25, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20வது கால்நடை கணக்கெடுப்பின் படி, 1.69 லட்சம் கறவை மாடுகள், பன்றிகள், செம்மறியாடு, வெள்ளாடு, நாய்கள், கோழிகள் என மொத்தம், 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன.
இதில், கன்றுகளுக்கு, தேசிய கருசிதைவு நோய் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என, கால்நடை துறை உத்தரவிட்டுஉள்ளது.
அதன்படி, கம்மவார்பாளையம் கால்நடை மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிந்தவாடி, படுநெல்லி, கம்மவார்பாளையம் ஆகிய கிராமங்களில், கால்நடை மருத்துவர் லட்சுமிபதி தலைமையில், கால்நடை துறையினர் நேற்று தடுப்பூசி செலுத்தினர்.