/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மரக்கிளையால் மறைந்த குறியீடு பலகை பொன்னேரிக்கரை சாலையில் விபத்து அபாயம்

ADDED : மார் 02, 2024 10:51 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை, கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், வளைவு உள்ள இடங்களில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், வளைவு குறித்த குறியீடு எச்சரிக்கை பலகை, சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், குறியீடு பலகை அருகில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரக்கிளைகளால் சாலை வளைவு குறியீடு எச்சரிக்கை பலகை மறைந்துள்ளது.
இதனால், இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலை வளைவு உள்ளதை கவனிக்காமல் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலை வளைவு குறியீடு பலகையை மறைக்கும் செடி, கொடி, மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.