/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாறுமாறாக திரும்பும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அபாயம்
/
தாறுமாறாக திரும்பும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அபாயம்
தாறுமாறாக திரும்பும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அபாயம்
தாறுமாறாக திரும்பும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அபாயம்
ADDED : ஏப் 10, 2025 01:38 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது. இப் பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதார் சாலைகளை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வாகனங்களில் ஊழியர்கள் தினமும் ஒரகடம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள், வண்டலுார், தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, மேம்பாலத்தின்கீழ் திரும்பம் இல்லாததால், இரண்டு கி.மீ., துாரம் மாத்துார் அருகே சென்று, ‛யூ -டர்ன்' எடுத்து மீண்டும் ஒரகடம் வந்து, இடது பக்கம் திரும்பி, வண்டலுார் - வாலாஜாபாத் சாலை வழியே வாகனங்கள் சென்று வந்தன.
இதனால், நேரம் விரையம் மற்றும் வாகனங்களின் எரிபொருள் வீணகுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, இந்த சாலையில், மெர்குரி தனியார் ஹோட்டல் அருகே, நெடுஞ்சாலையின் மீடியனை உடைத்து, புதியதாக, ‛யூ -டர்ன்' ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், எதிர் திசையான ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, அதிவேகமாக வரும் வாகனங்கள், இந்த இடத்தில், 'யூ -டர்ன்' எடுக்கும் வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன.
இதனால், தினமும் காலை, மாலை நேரங்களில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களை ஒழுங்குப்படுத்த, அப்பகுதியில் போலீசார் நியமிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.