/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் விபத்து அபாயம்
/
சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் விபத்து அபாயம்
சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் விபத்து அபாயம்
சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : பிப் 08, 2025 12:26 AM

உத்திரமேரூர்:வந்தவாசி -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பெருநகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பகுதிகளில் சட்ட விரோதமாக மணல், கஞ்சா, குட்கா பொருட்கள் கடந்த பயன்படுத்தப்பட்ட, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அது தொடர்பான வழக்குகள் முடியும்வரை, காவல் நிலையத்தின் அருகே, நிறுத்தி வைப்பது வழக்கம்.
தற்போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வந்தவாசி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ஓரத்திலே நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் மீது மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து தடுப்புகள் இருபுறமும் இருப்பதால், கனரக வாகனங்கள் அவ்வழியே செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.