/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரத்தில் சாய்ந்து கிடக்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்
/
சாலையோரத்தில் சாய்ந்து கிடக்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்
சாலையோரத்தில் சாய்ந்து கிடக்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்
சாலையோரத்தில் சாய்ந்து கிடக்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்
ADDED : மே 13, 2025 12:57 AM

உத்திரமேரூர் :உத்திரமேரூரில், பிரதான சாலைகளுள் ஒன்றாக இருப்பது காஞ்சிபுரம் சாலை. இந்த சாலையை பயன்படுத்தி, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன.
இச்சாலையின் ஓரங்களில் அடிக்கடி அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று, சாய்ந்து விழுந்து கிடக்கிறது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அவ்வழியே செல்லும் வாகனங்கள், முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயலும்போது, சாய்ந்து கிடக்கும் பேனரில் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல, பேருந்து நிலையம், வந்தவாசி சாலை, எண்டத்தூர் சாலை ஆகிய இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.
எனவே, சாலையோரத்தில் சாய்ந்து கிடக்கும் விளம்பர பேனரை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.