/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிள்ளைப்பாக்கத்தில் சாலையோரம் நிறுத்தும் தொழிற்சாலை வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : டிச 10, 2025 08:00 AM

ஸ்ரீபெரும்புதுார்: பிள்ளைப்பாக்கத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் தொழிற்சாலை வாகனங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பிள்ளைப்பாக்கம், கொளத்துார், நாவலுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன் படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையை ஒட்டி இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம், பிள்ளைப்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள் இந்த சாலையோரம் நிறுத்தப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட 'வேன்'கள் சாலையோரம் வரிசைக்கட்டி நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சாலையோரம் நிறுத்தும் வாகனங்களுக்கு, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.