/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் சரிந்து விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
/
சாலையோரம் சரிந்து விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
சாலையோரம் சரிந்து விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
சாலையோரம் சரிந்து விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 04, 2025 02:01 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் நான்கு சாலை சந்திப்பில் இருந்து, குன்றத்துார் செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளனமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தவிர, பட்டுநுால்சத்திரம் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏராளாமானோர் வந்து செல்கின்றனர்.
இந் நிலையில், போக்குவரத்து மிகுதியான இந்த சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பேனர், சரிந்து விழுந்து உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. தவிர, போக்குவரத்து நெரிசலும் எற்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், முக்கிய சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தம் வகையில் சரிந்து விழுந்துள்ள விளம்பர பேனரை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.