/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி நுழைவாயிலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகளால் விபத்து அபாயம்
/
பள்ளி நுழைவாயிலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகளால் விபத்து அபாயம்
பள்ளி நுழைவாயிலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகளால் விபத்து அபாயம்
பள்ளி நுழைவாயிலில் குவிக்கப்பட்டுள்ள மரக்கிளைகளால் விபத்து அபாயம்
ADDED : அக் 14, 2025 12:55 AM

ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில் உள்ள தி.சு.கி., அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,000க்கும் அதிகமான மாணவ --- மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி நுழைவாயில் அருகே, ஆபத்தான நிலையில் சாய்ந்திருந்த மரங்களை ஊராட்சி நிர்வாகத்தினர் கடந்த மாதம் வெட்டினர்.
இந்த நிலையில், வெட்டப்பட்ட மரக்கிளைகள் பள்ளி நுழைவாயில் அருகே குவிக்கப்பட்டுள்ளன. அவை, தற்போது வெயிலில் காய்ந்து சருகுகளாக உள்ளன. இதனால், அவை எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றி எரிய வாய்ப்பு உள்ளது.
அதேபோல, நுழைவாயில் அருகே குவிந்துள்ள மரக்கிளை கழிவுகளில் பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே, பள்ளி நுழைவாயிலில் உள்ள மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.முருகன், மாத்துார்.