/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் சின்ன காஞ்சியில் விற்பனை தாராளம்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் சின்ன காஞ்சியில் விற்பனை தாராளம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் சின்ன காஞ்சியில் விற்பனை தாராளம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் சின்ன காஞ்சியில் விற்பனை தாராளம்
ADDED : அக் 14, 2025 12:56 AM

காஞ்சிபுரம், தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்திய பின் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் டம்ளர் பயன்பாடு, சின்ன காஞ்சிபுரத்தில் அதிகரித்துள்ளதாக பகுதிமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தியப்பின் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருட்களுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் சுண்ணாம்பு கார தெரு, அமுதபடி தெரு, யாகசாலை மண்டபம் தெரு, அரசமரம் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டி கடை, ஸ்டேஷனரி, மளிகை கடைகளில், மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், பை தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், யாக சாலை மண்டபம் தெருவில், சாலையோரம் அமர்ந்து மது அருந்தும் 'குடி'மகன்கள் காலி பிளாஸ்டிக் டம்ளர்களை சாலையில் வீசிவிட்டு செல்வதால், அப்பகுதியில் பிளாஸ்டிக் டம்ளர்கள் குவியலாக உள்ளன.
மண்ணில் புதையும் பிளாஸ்டிக் டம்ளர்களால் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பெட்டி, மளிகை, ஸ்டேஷனரி கடைகளில் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.