/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் விபத்து அபாயம்
/
தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் விபத்து அபாயம்
ADDED : பிப் 03, 2025 01:43 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வடமங்கலம் சந்திப்பில் இருந்து, வடமங்கலம் வழியாக பண்ணுார் செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக பூதேரிப்பண்டை, வடமங்கலம், வயலுார், பண்ணுார், திருப்பந்தியூர், திருமேணிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிரமத்தினர், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், ஆதிகேசவ பெருமாள் நகர் அருகே உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு இல்லை. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சிறுபாலத்தின் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வானங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, சிறுபாலத்தின் இரண்டு பங்கங்களிலும் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

