/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : மே 05, 2025 01:01 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, மணல்மேடு பகுதியில், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை பயன் படுத்தி 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலையில் ஜல்லி, எம்.சான்ட், மரக்கட்டைகள் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் அதிகமாக செல்கின்றன.
அவ்வாறு செல்லும் வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிச் செல்கின்றன. அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், வேகமாக செல்லும்போது நிலைத் தடுமாறி கவிழ்ந்து, அருகே செல்லும் வாகனங்களும் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்க அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மேலும், மணல்மேடு பகுதியில் வாகன சோதனைச்சாவடி இருந்தும் அது செயல்படாமல் உள்ளது.
இதை பயன்படுத்தி, அவ்வழியே அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
எனவே, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.