/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் பெரியகரும்பூரில் விபத்து அபாயம்
/
மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் பெரியகரும்பூரில் விபத்து அபாயம்
மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் பெரியகரும்பூரில் விபத்து அபாயம்
மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் பெரியகரும்பூரில் விபத்து அபாயம்
ADDED : நவ 20, 2024 11:10 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் இருந்து, புதுப்பாக்கம் வழியாக, பெரியகரும்பூர் பகுதிக்கு செல்லும், 5 கி.மீ., துாரம், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், சாலை உள்ளது.
இந்த சாலை, கடந்த ஆண்டு தார் சாலையாக போட்டனர். சாலை போதிய பராமரிப்பு இல்லாததால், இரு புறமும் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
குறிப்பாக, கோவிந்தவாடி, புதுப்பாக்கம், பெரியகரும்பூர் ஆகிய பகுதிகளில், இரு புறமும் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக்கிடக்கின்றன. மேலும், பெரிய முட்புதர்களில் மின் கம்பி மீது உரசி விபத்து ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளன.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, கோவிந்தவாடி - பெரியகரும்பூர் இடையே, சாலையோரம் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.