/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த மின் கம்பத்தால் சங்கராபுரத்தில் விபத்து அபாயம்
/
சேதமடைந்த மின் கம்பத்தால் சங்கராபுரத்தில் விபத்து அபாயம்
சேதமடைந்த மின் கம்பத்தால் சங்கராபுரத்தில் விபத்து அபாயம்
சேதமடைந்த மின் கம்பத்தால் சங்கராபுரத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 21, 2025 01:41 AM

வாலாஜாபாத்:சங்கராபுரம் சாலையோரம் சேதமடைந்து உடைந்து விழும் நிலையிலான மின் கம்பத்தை அகற்றி புதிதாக அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், சங்கராபுரம் கிராம மக்கள், வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பிரதான சாலையில் உள்ள சங்கராபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு வருகின்றனர்.
அங்கிருந்து பேருந்து பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இப்பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு, மின் ஒயர்கள் மூலம், சங்கராபுரம் மற்றும் பழையசீவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சங்கராபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து அதன் மேல் பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகளை தாங்கி நிற்கிறது.
இதனால், காற்று மழை நேரங்களில் மின் கம்பத்தின் முனைப்பகுதி உடைந்து விபத்து ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, முன்னெச்சரிக்கையாக உடைந்து விழும் நிலையிலான அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

