/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாவூர் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தத்தால் விபத்து அபாயம்
/
உள்ளாவூர் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தத்தால் விபத்து அபாயம்
உள்ளாவூர் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தத்தால் விபத்து அபாயம்
உள்ளாவூர் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தத்தால் விபத்து அபாயம்
ADDED : பிப் 15, 2025 07:52 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், பழையசீவரம் அடுத்து உள்ளாவூர் பகுதி உள்ளது.
உள்ளாவூர் பிரதான சாலையில், பேருந்து நிறுத்தம் அருகே, தனியார் பேக்கரி மற்றும் தேனீர் விடுதி செயல்படுகிறது.
இச்சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகள், கடைக்கு சென்று வர சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தம் செய்கின்றனர்.
சாலையையொட்டி லாரிகள் நிறுத்தம் செய்வதால், அப்பகுதி பிரிவு சாலை வழியாக பல்வேறு கிராமங்களில் இருந்து மெயின் சாலைக்கு வரும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
மேலும், நிறுத்தப்பட்ட லாரிகள் மீண்டும் புறப்படும்போது, பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, உள்ளாவூர் பேருந்து நிறுத்தம் அருகே, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தம் செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.