/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆழ்துளை கிணற்றை சுற்றி குப்பை கொட்டி குவிப்பு
/
ஆழ்துளை கிணற்றை சுற்றி குப்பை கொட்டி குவிப்பு
ADDED : நவ 05, 2024 10:20 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. தினமும் அப்பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சந்தியம்மன் கோவில் தெருவில் உள்ள, குடிநீர் ஆழ்துளை கிணற்றின் அருகே, பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர கழிவுகளை அக்கம் பக்கத்தினர் கொட்டி வருகின்றனர். இதனால், ஆழ்துளை கிணற்றை சுற்றி குப்பை மேடாக மாறியுள்ளது.
மழை காலங்களில் குப்பை கழிவுகளுடன் மழைநீர் கலந்து, குடிநீர் ஆழ்துளை கிணற்றில் புகுந்து, குடிநீர் பாதிக்கும் சூழல் உள்ளது. கழிவு கலந்த குடிநீரை பருகும் பொதுக்களுக்கு, நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், ஆழ்துளை கிணறு அருகே உள்ள மழைநீர் கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து உள்ளது. இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வடிய தடை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆழ்துளை கிணற்றினை சுற்றி குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றி, மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சீரமைத்து, அப்பகுதியல் குப்பை கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

