/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ -- வீலர் நிறுத்தும் இடமாக மாறியது அச்சுகட்டு பயணியர் நிழற்குடை
/
டூ -- வீலர் நிறுத்தும் இடமாக மாறியது அச்சுகட்டு பயணியர் நிழற்குடை
டூ -- வீலர் நிறுத்தும் இடமாக மாறியது அச்சுகட்டு பயணியர் நிழற்குடை
டூ -- வீலர் நிறுத்தும் இடமாக மாறியது அச்சுகட்டு பயணியர் நிழற்குடை
ADDED : மார் 19, 2025 12:38 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, ஒலிமுகமதுபேட்டை, அச்சுகட்டு பேருந்து நிறுத்தத்தில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.
பஞ்சுபேட்டை, கருப்படிதட்டடை, ஒலிமுகமதுபேட்டை, நெட்டேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்து வரும் வரை, பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பயணியருக்கான நிழற்குடை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பயணியருக்கு இடையூறாக நிழற்குடையை இருசக்கர வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.