/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒருதலைபட்சமாக செயல்படும் ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., சேர்மன் கூட்டத்தில் இருந்து வி.சி., கவுன்சிலர் வெளிநடப்பு

ADDED : நவ 16, 2024 12:51 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி, ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி மற்றம் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதற்கிடையில், நெமிலி வி.சி., ஒன்றிய குழு கவுன்சிலர் தியாகு, தங்கள் பகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்படவில்லை. தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதுகுறித்து வி.சி., நெமிலி ஒன்றிய குழு உறுப்பினர் தியாகு கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவொரு வளர்ச்சி பணிகளும் எங்கள் பகுதிக்கு வழங்கவில்லை. போதிய நிதி இல்லை என, தி.மு.க., ஒன்றிய சேர்மன் தெரிவிக்கிறார்.
ஆனால், தி.மு.க., கவுன்சிலர்கள் பகுதிகளில் மட்டும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.