sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க...அலட்சியம்!:காஞ்சியில் காற்றில் பறக்கும் கட்டுமான விதிமுறை

/

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க...அலட்சியம்!:காஞ்சியில் காற்றில் பறக்கும் கட்டுமான விதிமுறை

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க...அலட்சியம்!:காஞ்சியில் காற்றில் பறக்கும் கட்டுமான விதிமுறை

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க...அலட்சியம்!:காஞ்சியில் காற்றில் பறக்கும் கட்டுமான விதிமுறை


ADDED : ஜன 17, 2025 09:33 PM

Google News

ADDED : ஜன 17, 2025 09:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:புராதன நகரமான காஞ்சிபுரத்தில், தொடர்ந்து அதிகரிக்கும் விதிமீறல் கட்டடங்கள் மீது சரியான நடவடிக்கை இல்லாததால், மாநகராட்சி முழுதும் ஏராளமான விதிமீறல் கட்டடங்கள் முளைப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாகவே விதிமீறும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், மாநகராட்சி அதிகாரிகளும், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளும் தயக்கம் காட்டுவதாக நகரவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் நகரில் நுாற்றுக்கணக்கான கட்டடங்கள், உள்ளூர் திட்ட குழும விதிகளை மீறி பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவது தொடர்கிறது. காஞ்சிபுரம் நகரில் சமீப காலமாகவே ஏராளமான புதிய குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

அதேபோல் கட்டப்படும் கட்டடங்கள் விதிமுறைகளை பின்பற்றி கட்டப்படுகிறதா அல்லது முறையான அனுமதி பெற்றவையா என கண்காணிக்கவும், அனுமதி வழங்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தொடர்ந்து அனுமதியற்ற கட்டடங்கள் வேகமாக முளைப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சிகளில் வீடு, கடை, திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவோர், அதற்கு கட்டட வரைபட அனுமதி பெற வேண்டும். வீடுகளை பொறுத்தவரை 4,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்குகிறது.

அதற்கு மேலான கட்டடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி வழங்குகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தியேட்டர், திருமண மண்டபம் என, ஒவ்வொரு கட்டடத்திற்கும், அதற்கு ஏற்றாற்போல் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கட்டட வரைபட அடிப்படையில் மட்டுமே கட்டடம் கட்டப்பட வேண்டும் எனவும், இருசக்கர வாகனம், கார் பார்க்கிங் போன்ற இடவசதி போன்றவையும் விதிமுறையில் உள்ளன.

ஆனால், காஞ்சிபுரத்தில் உள்ள பல திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் விதிமுறைகள் ஏதுமின்றி தொடர்ந்து கட்டப்படுகின்றன. காஞ்சிபுரத்தில், கடந்த 2002ல், உள்ளூர் திட்ட குழுமம் என்ற அமைப்பை, தமிழ்நாடு வீட்டு வசதி துறை, காஞ்சிபுரம் நகரில் அமைத்தது.

இந்த உள்ளூர் திட்ட குழுமம் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், வாலாஜாபாத் ஒன்றியத்தில், முத்தியால்பேட்டை, ஐயம்பேட்டை மற்றும் திம்மையன்பேட்டை ஆகிய மூன்று ஊராட்சிகளும், இதன் எல்லைக்குள் வருகிறது.

முறைகேடாக, அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் மீது சில நடடிக்கைகள் மட்டுமே கண்துடைப்புக்காக எடுக்கப்படுகிறேதே தவிர, விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக தொடர்கிறது.

இதற்கு உதாரணமாக, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிறவாதீஸ்வரர் கோவில் உள்ளிட் ஏழு கோவில்களை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான கட்டடங்கள் விதிமீறி கட்டி வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

தொல்லியல் துறை கோவில்கள் அமைந்த பகுதியில், 1 கி.மீ., சுற்றளவில் கட்டப்படும் கட்டடங்கள், 9 மீட்டர் உயரம் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏராளமான கட்டடங்கள் மற்றும் முறைகேடாக பல அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அனுமதியற்ற கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யக்கூடாது என, நகராட்சி நிர்வாகத்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும், அனுமதியற்ற கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்வதாலேயே, அதிகாரிகள் மீதான பயமின்றி கட்டடங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

காஞ்சிபுரம் புராதன நகராக விளங்குவதாலேயே, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை காஞ்சிக்கு கொண்டு வருகிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பல திட்டங்கள வீணடிக்கப்பட்டுள்ளன.

அரசியல் அழுத்தம் வரும் என்பதாலேயே நகரமைப்பு அதிகாரிகளும், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளும் விதிமீறல் கட்டடங்களை கண்டுகொள்வதில்லை என ,அதிகாரிகள் மீது நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெயரளவிலான நடவடிக்கைகையை கைவிட்டு, மாநகராட்சி முழுதும் தொடர்ந்து அதிகரிக்கும் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் விபரங்களை நகரவாசிகளுக்கு தெரியப்படுத்தினால் மட்டுமே, விதிமீறல் கட்டடங்கள் எண்ணிக்கை குறையும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us